ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் வழிகாட்டலில் உயர்தர மாணவர் மன்ற தலைவர் செல்வன் சதுர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆசிரியர்தின நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களால் “மனித வாழ்வில் விஞ்சி நிற்பது பாடப்படிப்பா அனுபவ படிப்பா” எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் மேடையேற்றப்பட்டது.