ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜஸ்ரின் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் புனித யாகப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் கஜீஸ்காந்த் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனி இடம்பெற்றதுடன் பவனி நிறைவில் திருவிழாவை முன்னிட்டு மறைக்கல்வி மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கதை, பாட்டு, கவிதை, நவநாள் மறையுரைகளை அடிப்படையாகக் கொண்ட வினாடிவினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.