ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2022ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதம பொறியியலாளருமான திரு. ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் தீவக வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி கம்சத்தனி வினோதன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்து கொண்டனர்.