ஊர்காவற்துறை கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி நிறைவேற்றினார்.
28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றதுடன் அன்னையின் திருச்சொருபம் கடலிலும் பவனியாக எடுத்துவரப்பட்டது.


