ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியில் முன்னெடுக்கப்பட்ட அன்னையின் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவந்தரநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.