யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த 03ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்றது.

ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் திரு. விஜயசுந்தரம், ஈழத்து குறும்பட இயக்குநர் திரு. மதிசுதா, உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. பிரபாகரன், திருமதி பிறைநிலா கிருஸ்ணராஜா மற்றும் திருமதி. அனுதர்சி கபிலன், அருட்தந்தை எய்ன்சிலி றொசான், ஆகியோர் வளவாளர்களாக கலந்து பத்திரிகை துறை, புலனாய்வு பத்திரிகையியல், புகைப்படத்துறை, வலைத்தள பாதுகாப்பு, குறும்படம், அச்சு ஊடகம், போன்ற தளங்களில் அருட்சகோதரர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் ஒளி, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, சமூகவலைத்தள நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, ஊடக தொழில்நுட்ப செயற்பாடுகள், குறும்பட தயாரிப்பு, செய்தி உருவாக்கம், செய்தி வாசிப்பு போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

By admin