திருத்தந்தையின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் ஒண்றிணைந்து திருஅவை செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரில் பங்கேற்போர் பற்றிய பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இப்பெயர்ப்பட்டியலில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ், செயலராக கர்தினால் மாரியோ கிரேக் அவர்களின் பெயர்களுடன் இந்திய ஆயர் பிரதிநிதிகள் நால்வரின் பெயர்களும் மற்றும் இலங்கையின் ஆயர் பிரதிநிதியாக காலி மறைமாவட்ட ஆயர் றேமன்ட் கிங்சிலி விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரின் பங்கேற்பாளர்களாக அருட்பணியாளர்கள் இருபால் துறவறத்தார் மற்றும் பொது நிலையினரும் கலந்து கொள்ள இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.