செபமாலை மாதத்தின் சிறப்பு நிகழ்வாகவும் உலக அமைதி வேண்டியும் தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட செபமாலைப் பேரணி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டது.
திருப்பலியை புதுக்குடியிருப்பு றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதம் இடம்பெற்றது. இப்பவனியில் 250 வரையான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.