உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்லத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர் திரு. சிம்சன் போல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சபையின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இக்கூட்டத்தில் மறைமாவட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம், பொதுப்பந்தி அங்கத்தவர்கள், பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களென பலரும் பங்குபற்றினர்.

By admin