கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள உருத்திரபுரம் பங்கு இளையோர்கள் முன்னெடுத்த தவக்கால யாத்திரை 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
வவுனியா கோவரசன்குளம் கல்வாரி பூங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தவக்கால யாத்திரையில் சிலுவைப்பாதை தியானமும் திருப்பலியும் இடம்பெற்றன. உருத்திரபுர பங்குதந்தை அருட்திரு போல் அனக்கிளிற் அவர்களின் ஓழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் யாத்திரையில் 50 இளையோர்கள் கலந்து கொண்டனர்.