உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருமண வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கான சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தம்பதியினருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் 50 வரையான தம்பதியினர் பங்குபற்றி பயனடைந்தனர்.