2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நீர்கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரிஸ்ரெலா கல்லூரியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று தொடர்ந்து அனைத்து மறைமாவட்ட ஆயர்கள், சர்வமத தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள், இறந்தவர்களின் உறவினர்களென பலரும் இணைந்து தாக்குதலில் பலியானவர்களின் உருவப்படங்களை தாங்கி உயிர்த்த இயேசுவின் திருச்சொருபத்தோடு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு பவனியாக சென்று அங்கு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர்.