உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வில் மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.