2023/24 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 09 மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
விஞ்ஞானப்பிரிவில் ஜீவிதன் 3A சித்தியை பெற்று மாவட்ட நிலையில் 06ஆம் இடத்தையும் ஸ்ரோபன்ராஜ் 3A சித்தியை பெற்று மாவட்ட நிலையில் 26ஆம் இடத்தையும் கணிதப் பிரிவில் கபில்ராஜ், யாக்சன், ராளன்ராஜ் ஆகியோர் 3A சித்தியையும் மற்றும் வர்த்தகப் பிரிவில் அட்சயன் 3A சித்தியையும் மாவட்ட நிலையில் 10ஆம் இடத்தையும் சஜித் 3A சித்தியையும் மற்றும் கலைப்பிரிவில் ஜெமில், தொழினுட்ப பிரிவில் பெரின் கிறிசார்ட் 3A சித்தியையும் மாவட்ட நிலையில் 02ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.
அத்துடன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நிலுக்சன் ABC சித்தியையும் தேனுஜன் 2AS சித்தியையும் அபிசார் 2BS சித்தியையும் கலைப்பிரிவில் அன்ஸ்ரன் 2AB சித்தியையும் மிதுன் A2B சித்தியையும் யானுசன் A2B சித்தியையும் வர்த்தகப் பிரிவில் மெரின் றொபிஸ்யான் 2CS சித்தியையும் பெற்றுள்ளதுடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் கலைப்பிரிவில் துசியந்தினி 2AB சித்தியையும்இ சரண்யா 3B சித்தியையும் குஜிந்தன் A2C சித்தியையும் கணிதப்பிரிவில் ஜெறின் 2CS சித்தியையும் தொழினுட்பப் பிரிவில் சதுர்சன் ABC சித்தியையும் பெற்றுள்ளார்கள்.