உடையார்கட்டு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானம் கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் மற்றும் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் கலந்து திருச்செபமாலை தியான உரைகள், குறும்படங்கள், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் திருச்சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றினூடாக பங்குமக்களை வழிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் உடையார்கட்டு பங்கு ஆலயங்களை சேர்ந்த 120 வரையான பங்குமக்கள் பங்குபற்றினர்.