தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகளை எண்ணிமப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் இலங்கை நூலக நிறுவனம் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன் ஒரு அங்கமாக வட இலங்கை மருத்துவ வரலாற்றை ஆவணமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பிராந்தியத்தில் மருத்துவ பணியாற்றிய கிறிஸ்தவ மிசனரி சபைகள் தொடர்பான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு அதற்கு பொறுப்பான தகவல் ஆய்வாளர் உசாளினி சபாநந்தம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin