வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர், மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெசிங்டன் லோகு அவர்கள் கலந்து திருச்சிலுவை பாதை, தியான உரைகள், ஒப்புரவு அருளடையாளம் என்பவற்றின் ஊடாக பங்கேற்பாளர்களை நெறிப்படுத்தியிருந்தார்.
இத்தியானத்தில் 130 பேர் பங்குபற்றியிருந்தனர்.