இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 10ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டு மையத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

சம்மேளன இயக்குநர் அருட்தந்தை ஹெலன பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் இலங்கையின் 12 மறைமாவட்டங்களில் இருந்தும் 150ற்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு முழுநாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்வு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்களுடன் இணைந்து 10 இளையோர் பங்குபற்றியுள்ளனர்.

By admin