இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 62 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் கீழ்ப்பிரிவில் மாதகல் பங்கை சேர்ந்த டிலோஜன் ஆன்சியா மத்திய பிரிவில் பெரிய விளான் பங்கைச்சேர்ந்த லஸ்ரின் அபிநயா மேற்பிரிவில் மானிப்பாய் பங்கைச்சேர்ந்த ஆன் டிலக்சி இளையோர் பிரிவில் மானிப்பாய் பங்கைச் சேர்ந்த செல்வன் ஜெனுஜன் மூத்தோர் பிரிவில் மானிப்பாய் பங்கைச்சேர்ந்த மரிய கொறற்றி சேவியர் ஆகியோர் முதலாமிடங்களை பெற்றுக்கொண்டனர்.
போட்டி நிறைவில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கழக அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.