இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழகத் தலைவர் திரு. கீர்தபொன்கலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் , இளவாலை மறைக்கோட்ட பங்குத்தந்தையர்கள், பங்கு பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்ததுடன் புதிய செயற்குழுத் தெரிவும் இடம்பெற்றது.