இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் நிறாஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு என்பவை இடம்பெற்றன.
தியான உரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சற் பற்றிக் அவர்களும் நற்கருணை ஆராதனையை அருட்தந்தை ஜேம்ஸ் நாதன் அவர்களும் வழிநடத்தினர்.
இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.