இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்லத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதமவிருந்தினராகவும், மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.