இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழா 25ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2019, 21, 22ஆம் ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் 2020ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்களிலும் A தர சித்திபெற்ற 7 மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துறை தலைவரும் கல்லூரியின் பழைய மாணவருமான பேராசிரியர் ஜேம்ஸ் றொபின்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.கணேசன் மற்றும் கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜொசி ஜெயன்ரன் அல்போன்சஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார், கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க பொருளாளர் திரு. ஜோசப் சந்திரா மற்றும் திருமதி. ஜொசி சுபதர்சினி ஆகியோர் கௌரவ விருந்தனர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.