இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கோலம் போடுதல், தோரணம், மாலை கட்டுதல், பேச்சு மற்றும் பாவோதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மானிப்பாய் ஆசிரியவள நிலைய விரிவுரையாளர் திருமதி முருகேசம்பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.