இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினத்தை முன்னிட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கனடா பழைய மாணவர் சங்க பிரதிநிதி திரு. பிறின்ஸ் கௌட்றி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அன்றைய தினம் வகுப்புகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றதுடன் கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 250 வரையான பழைய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.


