இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் அமைந்துள்ள பல்துறை கட்டடத்தொகுதியின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து கட்டடத்தொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இக்கட்டடத்திற்கான நிதியனுசரணையை கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க தலைவர் திரு. பிரின்ஸ் கௌட்றி அவர்கள் வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin