இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் கல்லூரி தினத்தை சிறப்பித்து பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்மயூரன் அவர்களின் வழிநடத்தலில் உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செரில்னஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 8ஆம் திகதி சனிக்கிழமை வீதி மரதன் ஓட்டப்போட்டியும் 11ஆம் திகதி இரத்ததான முகாமும் நடைபெற்றன.
 
தொடர்ந்து கல்லூரி தினம் 13ஆம் திகதி வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது. புனித ஹென்றியரசர் விழா திருப்பலியை பழைய மாணவகுருக்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
 
தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் மதியம் கலாச்சரா விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin