இளவாலை புனித யூதாததேயு ஆலய ஜப்பசி மாத திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
23ஆம் திகதி திங்கட்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநரும் சில்லாலை பங்குத்தந்தையுமான அருட்தந்தை பிறையன் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று 21 மாணவர்களுக்கு முதல்நன்மை அருட்சாதனமும் வழங்கப்பட்டது.