இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பொறுப்பாசிரியர் திரு. மத்தியூஸ் டியோனி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் சேந்தான்குளம் புனித அன்னாள் ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், புனித ஆரோக்கியநாதர் ஆலயம் புனித மடுமாதா ஆலயம், மாதகல் புனித லூர்து அன்னை கெவி ஆகிய இடங்களை தரிசித்து செபமாலை மற்றும் இறைவார்த்தை தியானத்திலும் ஈடுபட்டனர்.
அத்துடன் இளவாலையில் அமைந்துள்ள நட்பு மண் சிறுவர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்வூட்டல் நிகழ்விலும் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் 15 வரையான பீடப்பணியாளர்கள் கலந்து பயனடைந்தனர்.