திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வாக இளவாலை திருமறைக்கலாமன்றமும் யாழ். திருமறைக்கலாமன்றம் இணைந்து முன்னெடுத்த மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது.
இளவாலை திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனங்கள், பாடல்கள், கவிதை நிகழ்வுகளுடன் யாழ். திருமறைக்கலாமன்றத்தின் சிறப்பு நிகழ்வான ‘செம்பாத்தாள்’ கூத்துருவ நாடகமும் இடம்பெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறை ஓய்வுநிலை விரிவுரையாளரும், எழுத்தாளருமான திருமதி. ராணி சீதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமாகாண கல்வித் திணைக்கள தமிழ்த்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கவிதா சந்திரகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை லண்டன் திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திருமதி. ஜெயந்தி மற்றும் இளவாலை ரொட்டரிக்கழகம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin