இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை தேவராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.