மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார் குருமட அதிபர் அருட்தந்தை யோசப் ராஜ் கிளயர் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாம கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி. மேசி சேவியர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பாடசாலையின் ஓய்வு நிலை ஆசிரியை திருமதி. விஜய நிர்மலா கோகுலானந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் மற்றும் கால்கோள் விழா நிகழ்வுகள் கடந்த மாதம் 15, 30ஆம் திகதிகளில் நடைபெற்றன.
கால்கோள் விழாவின் பிரதம விருந்தினராக மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாம வலய பாடசாலை அபிவிருத்தியாளரும் நடனபாட ஆசிரிய ஆலோசகருமான திருமதி. ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களும் கலந்துகொண்டனர்.