இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 2ஆம் திகதி வரை பதுளை மறைமாவட்டத்தின் பணடாரவளை பிரசங்க நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
பதுளை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சமீர அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல்கள், புதிய நிர்வாகத்தெரிவு என்பன இடம்பெற்றன.
இலங்கையின் 12 மறைமாவட்டங்களிலிருந்தும் 90 வரையான இளையோரும் அவர்களுக்கு பொறுப்பான மறைமாவட்ட இயக்குநர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் தலைமையில் 7 இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin