இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற இப்போட்டிகளின் தமிழ்மொழி மூலமான போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களென 12 குழுக்கள் பங்குபற்றிய இப்போட்டியில் மன்னார் முருங்கன் புனித யாகப்பர் ஆலய மாணவர்கள் முதலாமிடத்தையும் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய மாணவர்கள் இரண்டாமிடத்தையும் மன்னார் ஜோசப்வாஸ் நகர் மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டி நிறைவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கனகேஸ்வரன், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து, மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை றொக்சன், சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை லக்ஸ்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin