யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா 28ஆம் ஆண்டு சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்பணி கமலகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றி வழிபாடும் தொடர்ந்து வாழ்த்துச்செய்திகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் அச்சபையின் ஆண், பெண் அருட்பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை பழைய மாணவர்கள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது.
சூழமைவு இறையியலுக்குள் குருத்துவ உருவாக்கத்தை நோக்காகக்கொண்டு முன்னாள் பேராயர் அம்பலவாணர் அவர்களது முயற்சியில் உருவான இவ் இறையியல் கல்லூரி போர்க்கால சூழலில் பல இடர்பாடுகளைச் சந்தித்தாலும், இறை அருளோடு தொடர்ந்தும் ஆண், பெண் அருட்பணியாளர்களை உருவாக்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.