இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரான்ஸ், பஹ்ரைன், வியட்னாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே கலந்துகெண்டது.
இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.