இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மறைக்கோட்டத்திலுள்ள வலைஞர்மடத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
யாழ். மறைமாவட்ட இறை அழைத்தல் இயக்குநரும் புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபருமான அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் வழிநடத்தலில் மறைமாவட்ட அருட்சகோதரர்களின் உதவியுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
25ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வு 30ஆம் திகதி புதன்கிழமை வரை முல்லைத்தீவு, கிளிநொச்சி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை மறைக்கோட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



