இரத்தினபுரி மறைமாவட்டம் குருவிட்ட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னாள் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

இரத்தினபுரி பங்குத்தந்தை அருட்தந்தை நிரோசன் வாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குரூஸ் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வாலயம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் பங்குத்தந்தை அவர்களின் வழிநடத்தலில் அமைக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் காட்சிதருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin