தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 51 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.