கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இயங்கும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை குருத்துவக் கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வில் குருக்கள், குருமட மாணவர்களென 34 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.