முழங்காவில், இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை விழா திருப்பலியை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களும் திருவிழா திருப்பலியை ஆரோபணம் இளையோர் இல்ல இயக்குநர் அருட்தந்தை சசிகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.