கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் பங்கு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வரும், பரந்தன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பெனற் அவர்களின் வழிகாட்டலில் “இயற்கையைப் பாதுகாப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ராஜ் வினோத் அவர்கள் வளவாளராகக் கலந்து பங்குமக்களை நெறிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து, கிளிநொச்சி, அமலமரித்தியாகிகளின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் ஆலய வளாகத்தினுள் நாட்டிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் 60 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin