யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியும் யாழ். பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த இசை ரசணை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓர்கன் இசைக்கருவியை மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்து அதனூடாக மாணவர்களின் ஆற்றுகையையும் ஆளுமையையும் ஊக்குவிக்கும் நோக்காகக் கொண்டு இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் யோகாசன விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. கிருஸ்ணகுமார் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இந்நிகழ்வில் 50 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.