உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல தலைவி அருட்சகோதரி றூபினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மல்வத்தை றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. மயில்வாகனம் றூபதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மானிப்பாய் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin