மன்னார் மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் மன்னார் மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன.

மன்னார் யோசப்வாஸ் நகரில் பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால் ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து ஆயர் அவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்துடன் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது.

இத்திருப்பலியில் ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

திருப்பலியை தொடர்ந்து ஆயலத்திற்குள் அமைந்துள்ள ஆயர் அவர்களின் கல்லறையில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுடன் மன்னார் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆயர் அவர்களின் சிலைக்கு சுடரேற்றி செபவழிபாடும் இடம்பெற்றது.

By admin