இந்தியாவிலிருந்து வருகைதந்த அன்பின் பணியாளர்கள் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஞானராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபை ஆலோசகர் அருட்தந்தை விசுவாசம், அருட்தந்தை ஜோன் போல், அருட்தந்தை பிலோமின் ராஜா, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் அன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி கட்சியினரும் ஆயர் அவர்களை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

By admin