இலங்கை சட்ட ஒழுங்குக்கான அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சட்ட ஒழுங்குக்கான அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.
அத்துடன் பலாலி வான்படை கட்டளைத்தளபதி குமாரசிறி அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயரை அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.