மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை திருச்செல்வம் அவர்கள் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் யுத்தகால சூழலில் ஆயித்தமலை மற்றும் புல்லுமலை திருத்தலப் பங்குகளின் பங்குத்தந்தையாகவும், நிர்வாகியாகவும் பொறுப்பேற்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் பணியாற்றியதுடன்; மட்டக்களப்பு இருதயபுரம் – கருவேப்பங்கேணி, சகாயபுரம் – புதுமைபுரம், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம், நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாகவும், திருகோணமலை தேற்றாத்தீவு யூதாததேயு மற்றும் அலஸ்தோட்ட இறையிரக்கத் திருத்தலங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.