சலேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்தந்தை டிலான் மரிசால் அவர்கள் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு இறைவனடி சேர்ந்துள்ளார்.
2020ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் கல்வி மற்றும் இறையழைத்தல் ஊக்குவிப்பு தளங்களில் தன்னை இணைத்து பணியாற்றியவர்.
அவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.