யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை குழும அருட்தந்தை அன்ரனி சில்வெஸ்ரர் அவர்கள் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனைடி சேர்ந்துள்ளார்.
ஊர்காவற்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் 2002ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு திருகோணமலை பாலையூற்று பங்கு மற்றும் ஹப்புத்தள புனித வனத்து சின்னப்பர் ஆலய உதவிப்பங்குத்தந்தையாகவும், மன்னார் ‘ஞானோதயம்’ ஆரம்ப நவசந்நியாச மட உதவி இயக்குநராகவும், வசந்தகம் டி மசனெட் இறையியலக நிதியாளராகவும், கிளிநொச்சி அன்னை இல்லம் மற்றும் சமூக சேவை மைய இயக்குநராகவும், அமலமரித்தியாகிகள் தொடர்பக குழும முதல்வராகவும், கொழும்புத்துறை புனித வளனார் சிறிய குருமட அதிபராகவும், கண்டி தேசிய குருமட ஆன்மீக இயக்குநராகவும், மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையாகவும் மற்றும் மறையுரைஞர் குழாம் அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார்.
அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.